சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் 16ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன வேளாண் துறை மற்றும் கிராம அமைச்சகத்தின் பொறுப்பாளர் 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் வேளாண்மை மற்றும் கிராமப்புறத்தின் உயர் தர வளர்ச்சி குறித்து விளக்கினார்.
இக்கால கட்டத்தில் சீனாவின் தானிய உற்பத்தி புதிய நிலையை எட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு இது முதன்முறையாக 70ஆயிரம் கோடி கிலோ தாண்டி 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட, 3700கோடி கிலோ அதிகமாகும்.
நாடளவில் நபர்வாரி தானிய கையிருப்பு 500கிலோவை எட்டி உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.