இந்திய ரயில்வே துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. செக்சன் கண்ட்ரோலர் பணியிடங்களுக்கு நாடு முழுவதும் மொத்தம் 368 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகள் நேரடி நியமனம் முறையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் 2025 அக்டோபர் 14க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வழக்கம்போல் வயது தளர்வு அளிக்கப்படும். தேர்வு முறையில், முதலில் கணினி வழித்தேர்வு, பின்னர் திறனறிப் பரீட்சை நடைபெறும். தேர்வில் 100 கேள்விகள் இருக்கும், கால அவகாசம் 2 மணி நேரம்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், [https://www.rrbchennai.gov.in/](https://www.rrbchennai.gov.in/) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு ரூ.250 மட்டுமே. மாத சம்பளமாக ரூ.35,400 வழங்கப்படும் இந்த பணிக்கு இப்போது விண்ணப்பித்து, அரசு வேலைக்கான வாய்ப்பைப் பயனாக்கி கொள்ளலாம்.
