ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன், வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.
இதன்படி மார்ச் 22ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாடுகிறது.
இந்த போட்டி சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறும்.
அடுத்த போட்டி, பஞ்சாப் கிங்சிற்கும், டெல்லி கேப்பிடல் அணியினருக்கும், மொஹாலியில் நடைபெறுகிறது.
தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 7 வரை நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியாகியுள்ளது.
மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை விவரம் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.