சீனாவின் குடிசார் பணிகள் குறித்து ஷிச்சின்பிங்கின் கூற்று, அண்மையில் தொகுத்து வெளியிடப்பட்டது.
குடிசார் பணிகள், பொது மக்களின் நலன்களுடன் தொடர்புடையவை. ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, “மக்கள் முதன்மை” என்பதில் ஊன்றி நின்று, பொது நலன் மற்றும் அடிப்படை தன்மை வாய்ந்த மக்களின் வாழ்க்கை பணிகளைச் சிறப்பாகப் புரிந்து வருகிறது. குடிசார் பணிகள் குறித்து, ஷிச்சின்பிங் வழங்கிய முக்கிய கூற்றுகள், புதிய யுகத்தில் குடிசார் பணிகளின் உயர் தர வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு வழிகாட்டலையும் உந்து சக்தியையும் ஊட்டியுள்ளன. சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம் மூலம், பன்முகங்களிலும் வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசிய மறுமலர்ச்சியை முன்னேற்றுவதற்கு, அவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது.
இந்த தொகுப்பு 6 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. 2012ம் ஆண்டின் நவம்பர் முதல் 2025ம் ஆண்டின் ஜுலை வரை குடிசார் பணிகள் குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் கூற்றுகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.