பாஜகவின் முதன்மைத் தலைவர் மற்றும் பிரதமராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி, 2047ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நூற்றாண்டு விழா முடிவடைந்த பிறகே ஓய்வு பெறுவார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை வாஜ்பாய் தலைமைக்கு பின்னர், மோடி – அமித் ஷா இருவரும் இணைந்து வலுவாக நிலைநிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசை தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு கொண்டு வந்த முக்கிய காரணமாக மோடியின் பேச்சுத் திறனும், முடிவெடுக்கும் தைரியமும் கருதப்படுகின்றன. “மோடி உள்ளவரை பாஜகவை யாராலும் அசைக்க முடியாது” என்ற நிலை அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.
இந்த நிலையில், 2047ஆம் ஆண்டு வரைவே அவர் பிரதமராக பதவி வகிப்பார் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளா். இதைத் தொடர்ந்து, பாஜகவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பும், விவாதங்களும் உருவாகி வருகின்றன.