மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முஇரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மக்களவை சபாநாயகராகவும், மகாராஷ்டிர முதல்வராகவும் பணியாற்றிய மூத்த தலைவரான ஸ்ரீ மனோகர் ஜோஷியின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.
தனது நீண்ட பொது வாழ்வில், ஸ்ரீ ஜோஷி மக்களிளை நேசித்தார். அவரது கூர்மையான புத்திசாலித்தனத்திற்காக அனைவராலும் பாராட்டப்பட்டார். கட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட தலைவர்களால் அவர் நேசிக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.