கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பின் வெளியில் வராமல் இருந்த தவெக தலைவர் விஜய், சற்றுமுன் சென்னை நீலாங்கரையில் இருந்து பட்டினபாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
I heard that @actorvijay is unwell. Get well soon.
I completely understand the trauma you are undergoing. Please take care of your health.
— Amar Prasad Reddy (@amarprasadreddy) September 29, 2025
கரூர் துயரச் சம்பவம் காரணமாக மன அழுத்தத்துடன் இருந்த விஜய், 40 பேருக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளின் பின்னணியில், தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பாஜகவின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான அமர் பிரசாத் ரெட்டி, X தளத்தில் பதிவு செய்து, “விஜய்க்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டேன். நீங்கள் அனுபவிக்கும் அதிர்ச்சியைப் புரிந்து கொள்கிறேன்.
உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். கரூர் சம்பவத்தால் தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ள நிலையில், விஜயின் உடல்நிலை குறித்த இந்த பதிவு சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
