சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரம் – கேரள சட்டபேரவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளி!

Estimated read time 0 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, கேரள சட்டபேரவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சபரிமலை அய்யப்பன் கோயிலில், கருவறைக்கு முன்பாக உள்ள இரு துவாரபாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில், தங்கம் குறைந்ததாகச் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்குத் தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சியினர் கேரள சட்டபேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கண்டன முழக்கையை எழுப்பினர்.

இதனால், அவையில் பதற்றம் நிலவியது. தொடர்ந்து இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்குக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author