அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலத்தின் மூத்த தலைவருமான ராஜேன் கோஹைன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
2016 முதல் 2019 வரை ரயில்வே இணையமைச்சராக பணியாற்றிய அவர், நாகேன் தொகுதியிலிருந்து தொடர்ந்து நான்கு முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் மாநிலத்தின் 17 முக்கிய நிர்வாகிகள் இணைந்து பாஜகவிலிருந்து விலகியுள்ளனர்.
பழங்குடியின மக்களுக்கு பாஜக கட்சி துரோகம் செய்துவிட்டதாகவும், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் ராஜேன் கோஹைன் குற்றம்சாட்டியுள்ளார். இவரது விலகல் அஸ்ஸாம் அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு இந்நிகழ்வு பாஜக தலைமைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.