குஜராத்தில் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையின் 25 மாநில அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரத்தை பாஜக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் பூபேந்திர படேல் முக்கியத் துறைகளான பொது நிர்வாகம், திட்டமிடல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, சாலைகள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றைத் தன்வசம் வைத்துள்ளார்.
துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சகத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இத்துடன் காவல்துறை, வீட்டுவசதி, சிறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு போன்ற இலாக்காக்களும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
நிதித்துறையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் விதமாக கனுபாய் படேல் தொடர்ந்து நிதி அமைச்சராக நீடிப்பார்.
குஜராத் புதிய அமைச்சரவையில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு கல்வித்துறை ஒதுக்கீடு
