இன்று மீண்டும் தொடங்கியது ஊட்டி மலை ரெயில் சேவை..!!

Estimated read time 1 min read

குன்னூரில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 18-ந் தேதி இரவு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

மேலும் தண்டவாளத்தில் மரங்கள், பாறைகள் விழுந்தன. இதனால் தண்டவாளங்கள் சேதமடைந்தது. இதனால் கடந்த 5 நாட்களாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. பணிகளை விரைந்து முடித்து, மலை ரெயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர்.
அதன்படி, கனமழையால் 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இயற்கையின் அழகினை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் ரெயிலில் பயணித்தனர். குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Please follow and like us:

You May Also Like

More From Author