2023ஆம் ஆண்டு உயிரின நாகரிகம் பற்றிய குய் யாங் சர்வதேசக் கருத்தரங்கில் சீன வானிலை நிலையம் ஜுலை 8ஆம் நாள் சீன காலநிலை மாற்றம் பற்றிய நீல அறிக்கையை வெளியிட்டது.
தூய்மையான கரி குறைந்த வளர்ச்சியைப் பூர்த்தி செய்து, உயிரின நாகரிக கருத்தை நடைமுறைப்படுத்தி, கால நிலை மாற்றத்தின் விதிகளை அறிந்துகொண்டு, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதை முன்னேற்றும் விதம், சீன வானிலை நிலையத்தின் காலநிலை மாற்ற மையம் இந்நீல அறிக்கையைத் தொகுத்துள்ளது. இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான தகவல்கள் சீனா, ஆசியா, மற்றும் உலகம் காலநிலை மாற்றத்தின் புதிய போக்கை வெளிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.