அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான முக்கியமான சந்திப்பு தென் கொரியாவின் பூசானில் இன்று (அக்டோபர் 30, 2025) நடைபெற்றது.
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இரு தலைவர்களும் நேரில் சந்திக்கும் முதல் நிகழ்வு இதுவாகும்.
ஏசியா பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (APEC) மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் இச்சந்திப்பின் முதன்மை நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையே அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் பதற்றங்களைக் குறைத்து, உறவுகளை ஒரு நிலையான பாதைக்குக் கொண்டு செல்வதுதான்.
டிரம்ப் -ஜி ஜின்பிங் சந்திப்பு: 6 வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொண்ட உலக ஆளுமைகள்
