5 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளின் ஆதார் விவரங்களை, குறிப்பாக கைரேகை மற்றும் கண் கருவிழி (ஐரிஸ்) விவரங்களை புதுப்பிக்க, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் கட்டாய முகாம்கள் நடைபெற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பள்ளிகளுக்கே தனிப்பட்ட செயலி (App) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பயோமெட்ரிக் அடையாளங்களை மீளப்பதிவு செய்வதன் மூலம், ஆதார் அட்டைகளின் அடையாளம் சரிசெய்ய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம், எதிர்காலத்தில் கல்வி, மருத்துவம், அரசுப் பயன்கள் போன்ற துறைகளில் குழந்தைகளின் தகவல் துல்லியமாகப் பதிவு செய்யப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.