“டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!” 

Estimated read time 1 min read

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, முதன்மைத் தேர்விற்கான கட்டணத்தைச் செலுத்தாதவர்கள் மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவர்கள், வரும் மார்ச் 5-ம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம் என டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் அளித்துள்ளது.

தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில், கட்டணம் செலுத்த தவறியவர்களுக்காகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் இந்த கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தி விரைவில் கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author