தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) மீண்டும் கடுமையாகச் சரிந்து, ‘மோசம்’ மற்றும் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவுகளுக்குள் நுழைந்துள்ளது.
குறுகிய கால மேம்பாட்டிற்குப் பிறகு, நகரின் பல பகுதிகளில் அடர்ந்த புகைமூட்டம் (Smog) மீண்டும் சூழ்ந்துள்ளது.
இன்று காலை AQI மதிப்பு: டெல்லி (மொத்தம்)- 264 -மோசம்; குருகிராம்- 229- மோசம்; நொய்டா- 216 -| மோசம்.
நேற்று புதன்கிழமை மாலை AQI 202 ஆகக் குறைந்து காற்றின் தரம் சிறிது மேம்பாடு கண்ட நிலையில், வியாழக்கிழமை காலைக்குள் பெரும்பாலான கண்காணிப்பு நிலையங்களில் AQI மீண்டும் 300-ஐத் தாண்டி ‘மிகவும் மோசம்’ என்ற வரம்பிற்குச் சென்றது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் சரிவு
