துபாயிலிருந்து செயல்படும் பிரபல இந்திய பயண யூடியூபரும், புகைப்படக் கலைஞருமான அனுனய் சூட் தனது 32வது வயதில் காலமானார்.
அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் இந்தச் செய்தி உறுதியாகியுள்ளது.
அவர் இறந்ததற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் இறப்பதற்குச் சற்று முன்பு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இருந்ததாக அவரது சமீபத்திய சமூக ஊடகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
“எங்கள் அன்பு மகன் அனுனய் சூட் மறைந்த செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் பகிர்ந்துகொள்கிறோம்.
இந்தக் கடினமான நேரத்தில் எங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று அவரது குடும்பத்தினர் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
பிரபல இந்திய டிராவல் இன்ஃபுளூயன்சர் 32 வயதில் மரணம்
