சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன துணை அரசுத் தலைவருமான ஹென்செங் ஜனவரி 19-ஆம் நாள் வாஷிங்டனில் அமெரிக்க துணை அரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேம்ஸ் டேவிட் வான்ஸைச் சந்தித்துரையாடினார்.
அப்போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அமெரிக்க அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் இடையே உருவாக்கப்பட்ட முக்கிய பொது கருத்துக்களை அமெரிக்காவுடன் இணைந்து, செவ்வனே நடைமுறைப்படுத்தி இரு நாட்டுறவின் நிதானமான, சுமூகமான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக ஹென்செங் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க-சீன வர்த்தக ஆணையம், அமெரிக்க வணிகச் சங்கம் உள்ளிட்ட தொழில் மற்றும் வணிகத் துறையின் பிரதிநிதிகளை அவர் சந்தித்துரையாடினார். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பைச் சீனா உறுதியாக முன்னேற்ற உள்ளது. அதோடு, வணிகச் சூழலையும் தொடர்ந்து மேம்படுத்த உள்ளது என்று அவர் கூறினார்.
இதே நாளில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாஸ்கைச் சந்தித்தார். சீனாவிலுள்ள முதலீட்டை அதிகரித்து, சீனாவுடன் ஒத்துழைப்பை ஆழமாக்கி அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் வர்த்தகத்தின் தொடர்பில் ஆக்கப்பூர்வ பங்களிப்பை ஆற்ற விரும்புவதாக மாஸ்க் தெரிவித்தார்.