உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், பீகார் தேர்தல் முடிவுகளை ஒட்டித் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பீகார் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துக்குச் சாதகமாக வந்திருப்பதன் மூலம், தேர்தல் ஆணையத்தின் சதி அம்பலமாகிவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாஜக ஒரு அரசியல் கட்சியல்ல, அது ஒரு ‘மோசடி’ என்றும் விமர்சித்துள்ளார்.
பீகாரில் நடந்த சர்ச்சைக்குரிய ‘SIR’ (சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்) என்ற ‘விளையாட்டை’, இனி தமிழ்நாடு, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், இந்த முறைகேடுகளைத் தடுக்கப் போவதாகவும் அகிலேஷ் யாதவ் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்
