16ஆம் நாள் நிறைவடைந்த 27ஆவது சீனச் சர்வதேச அதிநவீன தொழில்நுட்பக் கண்காட்சியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 4லட்சத்து 50ஆயிரமத்தைத் தாண்டியது. அதில் 5000க்கும் அதிகமான புதிய உற்பத்திப் பொருட்களும் சாதனைகளும் வெளியிடப்பட்டன. 1023 விநியோக மற்றும் நிதி முதலீட்டு ஒப்பந்தங்களின் கையொப்பம் முன்னெடுக்கப்பட்டது. விருப்ப நோக்கத்திற்கான வர்த்தம் மற்றும் முதலீட்டுத் தொகை 17000கோடி யுவானைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் தொழில்நுட்பத்துடன் தொழிலை முன்னெடுப்பு, இணைப்புடன் எதிர்காலத்தைக் கூட்டாகப் படைப்பது என்பது நடப்புக் கண்காட்சியின் தலைப்பாகும். உலகின் 100க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 5000 புகழ் பெற்ற தொழில்நிறுவனங்களும் தொடர்புடைய சர்வதேச அமைப்புகளும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டன.
மேலும், முக்கிய உபகரணங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மனிதன், வணிக நோக்கிற்கான விண்வெளி உள்ளிட்ட 22 பெரிய காட்சியிடங்கள் மூலம் சர்வதேச அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னணி வளர்ச்சிகளும் சீனாவின் உயர் நிலை புத்தாக்க சாதனைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
