தமிழகத்தில் வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் சின்னம் காரணமாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
அதன்படி, பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீர் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும், ஈரமாக இருக்கும் சேதமடைந்த சுவர்கள், முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றை அகற்றவோ அல்லது சரிசெய்யவோ துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று (நவ.24) பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை காலத்தைப் பயன்படுத்தி இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.
