சீனா தனது வேகமான வளர்ச்சி, நவீனத் தொழில்நுட்பம் மற்றும் எளிமையானச் செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்ற நாடு.
இந்நிலையில், ஒரு அமெரிக்கர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, சீனாவில் அன்றாடப் பணிகள் எவ்வளவு எளிமையாக்கப்பட்டுள்ளன என்பதை விளக்குகிறது.
அங்குப் பார்க்கிங் (Parking), பணம் செலுத்துதல் (Cashless), உணவு அருந்துதல் போன்ற சாதாரணச் சேவைகளும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் இயங்குவதைப் பார்த்து அந்த அமெரிக்கர் வியந்துள்ளார்.
சீனாவில் எங்கும் பாரம்பரியப் பார்க்கிங் மீட்டர்கள் இல்லை. வாகனத்தை நிறுத்த, ஓட்டுநர்கள் தங்கள் போன் மூலம் பார்க்கிங் இடத்தில் இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதும், கட்டணம் உடனே கழிக்கப்பட்டுவிடும்.
பார்க்கிங் நேரம் முடிந்தும் பணம் செலுத்தாமல் காரை எடுக்க முயற்சித்தால், தரையில் இருக்கும் ஒரு சாதனம் தானாகவே உயர்ந்து காரைத் தடுக்கும்.
மேலும், அங்குள்ள பெரும்பாலான வாகனங்கள் எலெக்ட்ரிக் (Electric) என்பதால், சாலைகளில் சத்தமும் (Noise) மிகவும் குறைவாகவே உள்ளது. இது போன்ற ஸ்மார்ட் அமைப்புகள், சீனா உண்மையிலேயே தொழில்நுட்பத்தின் சக்கரவர்த்தி என்பதை நிரூபிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
