சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் முக்கிய சர்வதேசப் பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் டிசம்பர் 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற “1+10” உரையாடல் கூட்டத்தில் பங்கெடுத்தார்.
அப்போது லீ ச்சியாங் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த உலக ஆட்சிமுறை முன்மொழி, மாற்றங்களைக் கொண்ட உலக நிலைமையை சர்வதேச சமூகம் சமாளித்து, இன்னல்களைத் தீர்ப்பதற்கு சீன ஞானம் மற்றும் சீனத் திட்டத்தை வழங்கியது என்றார். மேலும், திறப்பான ஒத்துழைப்புகளைச் சீனா எப்போதுமே செயல்படுத்தி முன்னேற்றி வருகிறது. பல்வேறு தரப்புகளுடன் இணைந்து பரஸ்பர நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக அமைப்புமுறையைக் கட்டியமைத்து, பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தை முன்னேற்றி, பலதரப்பு அமைப்பு முறையின் செல்வாக்கு மற்றும் செயல்திறனை உயர்த்த சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டவரைவு, உலக வளர்ச்சிக்கு நம்பிக்கை மற்றும் புதிய இயக்காற்றலை ஊட்டும் என்று சர்வதேசப் பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
