சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் சாதனைகளைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பாளர்களின் அமைச்சர் நிலை கூட்டம் ஜுன் 11ஆம் நாள் ஹுநான் மாநிலத்தின் ச்சாங்ஷா நகரில் துவங்கியது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒத்துழைப்புகளை, வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான முக்கிய அடிப்படையாக சீனா கொண்டுள்ளது. சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டில் எட்டப்பட்டுள்ள சாதனைகளைச் செயல்படுத்துவதை ஆப்பிரிக்காவுடன் கூட்டாக முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். சீனாவுடன் தூதாண்மை உறவை கொண்டுள்ள 53 ஆப்பிரிக்க நாடுகளின் உற்பத்திப் பொருட்களுக்கு சீனா சுங்க வரி இல்லா கொள்கையை மேற்கொண்டு, வளர்ச்சி குன்றிய நாடுகளின் பொருட்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியளிப்பதாக ஷி ச்சின்பிங் அறிவித்தார் என்றும் லின் ஜியான் கூறினார்.