சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மலேசியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 12ஆம் நாள், சீன ஊடகக் குழுமத்தால் தயாரிக்கப்பட்ட சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு எனும் நடவடிக்கை கோலாலம்பூரில் தொடங்கியது.
ஷிச்சின்பிங்கின் கலாசார நெருக்கம், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பத்து சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மலேசியாவின் முக்கிய ஊடகங்களில் ஒளிப்பரப்பப்படும்.
சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹைய்சியோங், மலேசியாவின் பெர்னாமா தலைவர் வோங் சுன் வேய் ஆகியோர், காணொலி வழியாக உரை நிகழ்த்தினர்.
அப்போது ஷென் ஹைய்சியோங் கூறும்போது, நடப்பு சிறந்த நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு, சீன-மலேசியா இடையே மானிடவியல் பரிமாற்றத்தை மேம்படுத்தவும் இரு நாட்டு மக்களுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தவும் துணைபுரியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வோங் சுன் வேய் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, பண்பாடு, திரைப்படம் முதலிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்புகள் தொடர்ந்து ஆழமாகி, மானிடவியல் பரிமாற்றமும் நாளுக்கு நாள் நெருங்கி வருகின்றது என்று தெரிவித்தார்.