“அமமுக இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது”… டிடிவி தினகரன் அதிரடி பேட்டி..!!! 

Estimated read time 0 min read

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அமமுகவின் நிலைப்பாடு ஏற்கனவே பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையே மீண்டும் மீண்டும் கூறுவதில் விருப்பமில்லை. பல்வேறு சோதனைகளையும், பின்னடைவுகளையும் கடந்து அமமுக இன்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து உள்ளது. தமிழகத்தில் அமமுகவை தவிர்த்துவிட்டு யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

தற்போது கூட்டணிக்காக பல தரப்பினரும் அமமுகவை அணுகி வருகின்றனர். எங்களது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும். பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்குப் பிறகு அமமுகவின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

தவெக (தமிழக வெற்றிக் கழகம்) உண்மையில் தூய சக்தியா என்பது வரவுள்ள தேர்தலிலேயே தெரிய வரும். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது தவறான முன்னுதாரணம். இந்த ஆண்டில் தீபம் ஏற்ற முடியாவிட்டால், அடுத்த ஆண்டு பார்த்துக்கொள்ளலாம் என்ற மனப்பான்மை இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author