சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10வது அமைச்சர் நிலை கூட்டத்தில் ஷிச்சின்பிங் உரை

Estimated read time 1 min read

 

சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10வது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 30ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் கலந்து கொண்டு, ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது, கடந்த காலத்தில் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் சீனாவுக்கும் அரபு நாடுகளுக்குமிடையிலான பொது எதிர்காலம் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது உள்ளிட்டவை பற்றி உரை நிகழ்த்தினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், கொந்தளிப்பான உலகத்தில், ஒன்றுக்கு ஒன்று மரியாதை என்பது நல்லிணக்கத்துடன் வாழ வழியாகும். நியாயமும் நீதியும் நீண்டகால பாதுகாப்பின் அடித்தளமாகும். அரபு நாடுகளுடன் இணைந்து, ஐநா சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாட்டையும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் சுய தேர்வையும் வரலாறு உருவாக்கிய புறநிலை உண்மையையும் மதித்து, நியாயம் மற்றும் நீதியைப் பேணுவதற்கும் நீண்டகால நிதானத்தை அடைவதற்கும் உகந்த சூடான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராய விரும்புகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன் இணைந்து, முதலாவது சீன-அரபு உச்சிமாநாட்டின் போது, சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்புக்கான 8 கூட்டுச் செயல்களை முன்வைத்தேன். இவை, தொடக்க நிலையில், சாதனைகளைப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில், அரபு நாடுகளுடன் சேர்ந்து உயிர் ஆற்றல் கொண்ட புத்தாக்கம் வழங்கும் நிலைமையை கட்டியமைக்க சீனா விரும்புகிறது. மேலும் பெரியளவில் முதலீடு மற்றும் நாணய ஒத்துழைப்பு அளவை அதிகரித்து, மேலும் செழுமையான எரியாற்றல் ஒத்துழைப்பு நிலைமையை விரிவாக்கி, மேலும் சமநிலையில் பொருளாதார வர்த்தகத் துறையில் கூட்டு நலன் தரும் நிலைமையை உருவாக்கி, மேலும் பெரியளவில் மானுட பண்பாட்டுப் பரிமாற்ற நிலைமையை முன்னேற்ற சீனா முயற்சி செய்யும் என்று ஷி ச்சின்பிங் கூறினார்.

முதலாவது சீன-அரபு உச்சிமாநாட்டின் சாதனைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சீனா மன நிறைவு பெற்றுள்ளது. அரபு நாடுகளுடன் இணைந்து, இந்த உச்சிமாநாட்டின் நெடுநோக்குத் தலைமைக்கு சீனா பங்கு ஆற்றும்.

தவிரவும், இரு தரப்புகளின் தொடர் வளர்ச்சியை தொடர்ந்து முன்னேற்ற சீனா விரும்புகிறது. 2026ஆம் ஆண்டில், 2ஆவது சீன-அரபு நாடுகள் உச்சிமாநாட்டை சீனா நடத்தும். இது, இரு தரப்புறவின் இன்னொரு மைல் கல் என்று சீனா நம்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.

காசாவில் மனித நேய நெருக்கடி மற்றும் போருக்குப் பிந்தைய சீரமைப்புப் பணிக்குச் சீனா தொடர்ந்து ஆதரவையும் அவசர மனித நேய உதவிகளையும் வழங்கும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author