சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த லியூ ஃபுயூ என்ற 13 வயது சிறுவன், ஒரே நேரத்தில் 8 பேரிடரும் நோய்கள் தொற்றிக் கொண்டுள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் உடல் எடை தற்போது வெறும் 15 கிலோ தான். ஐந்தாவது முறையாக குடல் செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுவன் தாயிடம் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி, பலரது கண்களில் கண்ணீரை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாவை நேரில் பார்க்க முடியாததால்,”மருந்துகள் வேலை செய்யவில்லை அம்மா… வீட்டுக்கு போவோம், அங்க தான் நான் நலமடைவேன்” என ஒரு கடிதம் மூலம் தன் மனம் திறந்துள்ளார் சிறுவன். இதைக் கேட்டதும் தாயார் மருத்துவமனைக்கு பாய்ந்து வந்துள்ளார். தாயாரும் சிறுவனும் ஒருவருக்கொருவர் எழுதிய கடிதங்கள், அவர்களுக்கிடையிலான பாசத்தை வெளிப்படுத்துகிறது. தாயாரின் பதில் – “என்ன நடந்தாலும் உன்னை நான் காப்பாற்றுவேன் மகனே” என்பதுதான்.
இந்தச் சம்பவம் தற்போது சீனாவின் சமூக ஊடகங்களில் பெரும் பரவலாக பேசப்படுகின்றது. இதுபோன்று குழந்தைகள் துயரத்தில் இருந்தால், அவர்கள் பெற்றோர்களுக்கு தான் அந்த வலியை உணர முடியும். ஒரு தாய், தனது பிள்ளையின் உயிருக்காக போராடும் அந்த உணர்வு, உலகெங்கிலும் உள்ள அனைவரையும் கலங்கடிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.