மத்திய அரசுக்கு (ஒன்றிய அரசு) எதிராகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு மிகப்பெரிய சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
மாநில அரசுகளுக்கு இருக்கும் அரசியல் சாசன உரிமைகளை மதிக்காமல், கேரளா கடன் வாங்குவதற்கான எல்லையை (Borrowing Limit) கடைசி நேரத்தில் மத்திய அரசு குறைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் இத்தகைய பாரபட்சமான செயல்பாடுகள் மாநிலத்தின் நிதி நிலையைச் சிதைப்பதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இது கேரள அரசை மட்டும் பாதிக்கும் விஷயம் அல்ல, ஒட்டுமொத்த கேரள மக்களின் அன்றாட வாழ்க்கையையும், நலத்திட்டங்களையும் பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கை என எச்சரித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த ஒருதலைப்பட்சமான போக்கைக் கண்டித்து, மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
