தமிழர்கள் பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “மக்களை ஒன்றிணைத்து, நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் போற்றும் இந்தத் திருநாள், நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளைப் பிரதிபலிக்கிறது என்றும், இந்தப் பொங்கல் அனைவரது வாழ்விலும் புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
