சீனாவின் சோங்கிங் பகுதியில் அமைந்துள்ள மிகவும் ஆபத்தான சுரங்கப்பாதை ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக சுரங்கப்பாதைகள் நேராக இருக்கும், ஆனால் இந்த சுரங்கப்பாதை எதிர்பாராத திருப்பங்களையும் ‘லூப்’ போன்ற அமைப்பையும் கொண்டிருப்பதால் ஓட்டுநர்களுக்கு பெரும் சவாலாகவும் திசை குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் குறுகலான பாதை, இருள் சூழ்ந்த உட்புறம் மற்றும் சுவர்களில் இருந்து கசியும் நீர் என ஒரு திகில் படத்தின் காட்சியைப் போல இது காட்சியளிக்கிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 48 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
View this post on Instagram
A post shared by Arsha_culture_travel (@arsha_culture_travel)
“>
மேலும் வீடியோவைப் பார்த்த பலரும், “இங்கு கார் பழுதாகி நின்றால் நிலைமை என்னவாகும்?” என்றும், இது ஓட்டுநர்களின் தைரியத்திற்கு விடப்பட்ட ஒரு சவால் என்றும் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையின் விசித்திரமான மற்றும் பயமுறுத்தும் கட்டமைப்பு, இணையவாசிகளிடையே தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
