சீனாவின் உள்நாட்டு அறிவுசார் காப்புரிமை கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை அதிகம்

சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை பணியகத்தின் துணை தலைவர் ரென்வென்பியௌ 23ஆம் நாள், சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீனாவின் உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுசார் காப்புரிமை குறித்து அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், 2025ஆம் ஆண்டின் இறுதி வரை சீனாவின் உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுசார் காப்புரிமைகளின் எண்ணிக்கை 53 இலட்சத்து 20 ஆயிரமாகும் எனத் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு பத்து ஆயிரம் நபருக்கான உயர் மதிப்பு கண்டுபிடிப்பு அறிவுசார் காப்புரிமை எண்ணிக்கை 16 ஆகும் எனக் கூறிய அவர், பதிவு செய்யப்பட்டுள்ள வணிகச் சின்னங்களின் எண்ணிக்கை 4 கோடியே 98 இலட்சத்து 70 ஆயிரமாகும் என்றார். மேலும், உலகளவில் முன்னணியில் உள்ள 5000 வணிகச் சின்னங்களில் சீனாவைச் சேர்ந்த வணிக சின்னங்களின் மொத்த மதிப்பு ஒரு இலட்சத்து 81 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டி, உலகளவில் 2ஆவது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author