சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 19ஆம் நாள் பிஷ்கெக் நகரில் கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குலுபேவுடன் முதலாவது நெடுநோக்கு பேச்சுவார்த்தையை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், இரு நாட்டின் அரசுத் தலைவர்களின் ஊக்கத்துடன், சீனா மற்றும் கிர்கிஸ்தானின் பன்முக ஒத்துழைப்புகள் ஆழமாக வளர்ந்து வருகின்றன. மேலும், கிர்கிஸ்தான், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்புத் தலைவர் நாடாகப் பொறுப்பு வகிப்பதற்குச் சீனா முழு மூச்சுடன் ஆதரவளிக்கும் என்றார்.
கிர்கிஸ்தான் ஒரே சீனா என்ற கொள்கையைப் பின்பற்றி சின்சியாங், சிட்சாங், ஹாங்காங் உள்ளிட்ட சீனாவின் மைய நலன்களுடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலும் சீனாவுக்கு உறுதியாக ஆதரவளிக்கும் என்று குலுபேவ் தெரிவித்தார்.
