சீனாவில் பசுமையான வளர்ச்சிமுறை மாற்றம் முன்னேற்றப்பட்டது

Estimated read time 1 min read

சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகத்திலிருந்து கிடைத்த தரவுகளின்படி, கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் தொழிற்துறை மற்றும் எரியாற்றல் கட்டமைப்பு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. சமூகத்தில் நீர் சிக்கனம் மற்றும் பசுங்கூட வாயு வெளியேற்றக் குறைப்பில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

14வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில், மின்சார வாகனம், ஒளிவால்ட்டா வசதி, லித்தியம்-அயன் மின்கலம், சூரிய ஆற்றல் இயந்திரம் உள்ளிட்ட முக்கிய பசுமையான உற்பத்தித் தொழில் துறைகளின் விற்பனை வருமானம் ஆண்டுக்கு சராசரியாக 30 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. புதிய எரியாற்றல், எரியாற்றல் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பசுமையான தொழில் நுட்பச் சேவை துறைகளின் விற்பனை வருமானம் ஆண்டுக்கு சராசரியாக முறையே 51.1, 28.5 மற்றும் 18.2 விழுக்காடு அதிகரித்தது.

மேலும், 2025ஆம் ஆண்டு, காற்றாற்றல், சூரிய ஆற்றல், நீராற்றல், அணு ஆற்றல் உள்ளிட்ட பசுமையான எரியாற்றல் மின்சார உற்பத்தியின் வருமானம், மொத்த மின்சார உற்பத்தி வருமானத்தில் 42.6 விழுக்காடை வகித்து, 13வது ஐந்தாண்டுத் திட்டக்கால இறுதியில் இருந்ததை விட 7.2 சதவீதப் புள்ளியை அதிகரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author