கொழும்புவில் நடந்த டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கெத்தாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை விட, மைதானத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இடையே நடந்த உரையாடல் தான் இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரல்.
பொதுவாகவே இந்திய வீரர்கள் மைதானத்தில் ஹிந்தியில் தான் பேசிக்கொள்வார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும் என்பதால், அவர்கள் பிளான் எதையும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக சூர்யா தனது வீரர்களிடம் ஆங்கிலத்தில் பேசி ஆட்டத்தை நகர்த்தினார்.
இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில், சூர்யா சிரித்துக்கொண்டே வருண் சக்கரவர்த்தியிடம் சென்று, “மச்சான், என்கிட்ட ஹிந்தியிலேயே பேசு ப்ளீஸ்” என்று கேட்க, அதற்கு வருண் சக்கரவர்த்தி கொஞ்சமும் யோசிக்காமல், “எனக்கு ஹிந்தி தெரியாது மச்சி” என்று கூலாகப் பதிலளித்துள்ளார்.
வருண் சுத்தமான தமிழ்நாட்டுக்காரர் என்பதால் அவருக்கு ஹிந்தி தெரிய வாய்ப்பில்லை. அவர் மற்ற வீரர்களிடம் ஆங்கிலத்திலும், தமிழக வீரர்களிடம் தமிழிலும் தான் பேசி வருகிறார். சூர்யா இதைத் தமாஷாகச் சொன்னாலும், “தெரியாத மொழியை ஏன் பேசச் சொல்லணும்? தமிழ்நாட்டு வீரர்களை இப்படி வற்புறுத்துவது சரியா?” என நெட்டிசன்கள் சிலர் பொங்கி எழுந்து சூர்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
எது எப்படியோ, “ஹிந்தி தெரியாது போடா” மொமென்ட்டை வருண் சக்கரவர்த்தி உலகக்கோப்பை மேடையிலேயே காட்டியிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
