15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் ஆரோக்கியமான சீனாவின் கட்டுமானம் முன்னேற்றம் அடைய ஷிச்சின்பிங் வலியுறுத்தல்

Estimated read time 0 min read

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் மார்ச் 6ஆம் நாள் பிற்பகல் சென்று பார்வையிட்டார்.

சீன விவசாயிகள் மற்றும் தொழிலாளர் ஜனநாயகக் கட்சி, ஜுயுசான் சங்கம், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை, நலவாழ்வு மற்றும் காப்புறுதித் துறை ஆகியவைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர்களின் விவாதத்தில் கலந்து கொண்ட ஷிச்சின்பின், அவர்களின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கேட்டறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் உரை நிகழ்த்துகையில், 2035ஆம் ஆண்டுக்குள் ஆரோக்கியமான சீனாவின் கட்டுமானத்தை நிறைவேற்றுவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி எடுத்துள்ள உத்திநோக்கு முடிவாகும்.

15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலம் என்பது இந்த இலக்கை நனவாக்குவதற்கான முக்கிய காலமாகும்.  தீர்க்கமான முன்னேற்றத்தை அடையும் விதம், ஒட்டுமொத்த திட்டங்களை வகுத்து, அவற்றின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், ஆரோக்கியமான சீனாவை கட்டமைப்பதற்கு முழு சமூகத்தின் முயற்சியும் தேவை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு சிறப்பு கலந்தாய்வு அமைப்பின் பங்களிப்புடன் நடைமுறைக்கு ஏற்ற பயனுள்ள நடவடிக்கை மற்றும் முன்மொழிவுகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மார்ச் 8ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் வரவுள்ளதை முன்னிட்டு, ஷி ச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சார்பில், இரு கூட்டத்தொடர்களில் கலந்து கொண்ட பெண் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய இனங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த பெண்களுக்கும், ஹாங்காங் மற்றும் மக்காவ் சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களிலும், தைவான் பகுதியிலும் உள்ள பெண்களுக்கும், வெளிநாடுகளிலுள்ள சீனப் பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author