சீனப் பாணி நவீனமயமாக்கத்தை முன்னேற்றும் வகையில், கிராமப்புற மறு மலர்ச்சியைப் பன்முகங்களிலும் மேம்படுத்தி, நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான வளர்ச்சியில் காணப்படும் ஏற்றத்தாழ்வு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
இவ்வாண்டு முதல், சீனப் பாணி நவீனமயமாக்கத்தின் ஒட்டுமொத்த சூழ்நிலையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஷிச்சின்பிங் வைத்தார்.
பிராந்திய ஒருங்கிணைந்த வளர்ச்சி நெடுநோக்கை ஆழமாகச் செயல்படுத்தி, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை துரிதப்படுத்தி, சீனப் பாணி நவீனமயமாக்கத்துக்குரிய இயக்க ஆற்றலை ஊட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய காலத்தில் மத்திய பிராந்தியத்தின் எழுச்சியை ஊக்குவிப்பதற்கான கலந்துரையாடல் கூட்டத்தில் உயர்தர உற்பத்தி திறனை ஆக்கப்பூர்வமாக வளர்ப்பதிலிருந்து, தானிய பொருட்கள் மற்றும் எரிசக்தி மூலவளத்தின் பாதுகாப்பு உத்தரவாத திறனை மேம்படுத்த பாடுபடுவதற்கு ஷிச்சின்பிங் முன்வைத்த 6 கோரிக்கைகளில் மத்திய பிராந்தியத்தின் எழுச்சியை மேலும் முன்னேற்றுவதற்கான முறையான பரவலையும் செய்துள்ளார்.