உலகையே அதிரவைத்த அந்த ‘பேசும்’ ஜோடி.. பின்னணியில் இருந்த விசித்திரமான ரூல்ஸ்..!! 

Estimated read time 1 min read

நார்மலாக நாம் போனில் பேசினால் 20 நிமிடங்கள் அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரம் பேசுவோம். ஆனால், உலகிலேயே மிக நீண்ட நேரம் போனில் பேசி கின்னஸ் சாதனை படைத்த ஒரு ஜோடியைப் பற்றித் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

கடந்த 2012-ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எரிக் ஆர். ப்ரூஸ்டர் மற்றும் அவேரி ஏ. லியோனார்ட் ஆகிய இருவரும் தொடர்ந்து 46 மணி நேரம், 12 நிமிடங்கள், 52 வினாடிகள் போனில் பேசி இந்த உலக சாதனையைப் படைத்துள்ளனர்.

இந்த உரையாடலின் போது அவர்கள் 10 வினாடிகளுக்கு மேல் அமைதியாக இருக்கக் கூடாது என்ற கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து இவ்வளவு நேரம் பேசுவது கடினம் என்பதால், ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் பிறகு அவர்களுக்கு 5 நிமிடங்கள் ஓய்வு வழங்கப்பட்டது. இதற்கு முன்பாக, 2009-ஆம் ஆண்டில் சுனில் பிரபாகர் என்பவர் 51 மணி நேரம் போனில் பேசி சாதனை படைத்திருந்தார்.

ஆனால், அவர் ஒரே நபருடன் பேசாமல், ஒருவரிடம் பேசி முடித்ததும் அடுத்தடுத்த நபர்களுடன் மாற்றி மாற்றிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. எரிக் மற்றும் அவேரி ஜோடியின் இந்த இடைவிடாத போன் கால் சாதனை இன்றும் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author