சென்னை : பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்(46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில், நேற்று ஷூட்டிங்கின்போது மயங்கி விழுந்த அவர் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 8:30 மணியளவில் காலமானார்
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான இவர், இவர், விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களால் ரசிகர்களை கவர்ந்தார்.
அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தமும் பாதிப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோபோ சங்கரின் மறைவு தமிழ் திரையுலகையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, செப்டம்பர் 19 அன்று இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.
அதன்படி, அவரது உடல் இன்று (செப்டம்பர் 19, 2025) மாலை தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, அங்கு பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.