பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபருக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வாழ்த்து

Estimated read time 0 min read

பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில், பாகிஸ்தானின் முன்னேற்றத்தைக் கண்டு சீனா மனதார மகிழ்ச்சி அடைவதாகவும், அந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் சீனா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவு தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், பாகிஸ்தானை தனது நெருங்கிய நண்பன் என சீன அதிபர் பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் பணியாற்றி வரும் சீனப் பொறியாளர்கள் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் காட்டி வரும் நெருக்கம் போன்றவை சீனாவுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.

இத்தகைய கசப்பான சம்பவங்களுக்கு மத்தியிலும், சீன அதிபர் பாகிஸ்தானைப் புகழ்ந்து பேசியிருப்பது ஒரு முக்கியமான ராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் மீண்டும் முழுமையாகத் தன் பக்கம் இருப்பதை உறுதி செய்யவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும் சீனா இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author