“வேலைக்கு ஆகாத பாகிஸ்தான் பிளான்!”.. சமாதானப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு.. 15 அம்சத் திட்டத்தை ஓரங்கட்டிய ஈரான்..!!! 

Estimated read time 0 min read

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மூண்டுள்ள போரைத் தடுத்து நிறுத்த, அண்டை நாடான பாகிஸ்தான் மிகுந்த ஆர்வத்துடன் களமிறங்கியது. இதற்காக 15 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் ஒன்றை பாகிஸ்தான் தயாரித்து, அதை இரு நாடுகளுக்கும் இடையே தூது சென்று முடிக்கத் திட்டமிட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்துடன் நெருக்கம் காட்டி வந்த பாகிஸ்தான், இந்த முயற்சியின் மூலம் உலக அரங்கில் தனக்கென ஒரு நற்பெயரைப் பெற முயன்றது.

ஆனால், பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு ஈரான் தற்போது கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், அந்தத் திட்டத்தை அடியோடு நிராகரித்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவின் தூதுவராகப் பாகிஸ்தான் செயல்படுவதாகக் கருதும் ஈரான், “அமெரிக்கா தன்னுடன் தானே பேச்சுவார்த்தை நடத்திக்கொள்கிறது” எனப் பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சியை எள்ளி நகையாடியுள்ளது.

இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சமாதானம் செய்யப் போன பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author