கொரோனாவை விட மோசமான பாதிப்பு? உலகப் பொருளாதாரமே நிலைகுலையும் அபாயம்

Estimated read time 1 min read

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் நீடித்தால், அதன் தாக்கம் கோவிட்-19 பெருந்தொற்றை விட மிக மோசமாக இருக்கும் என்று சவுதி அரேபியாவின் நிதி அமைச்சர் முகமது அல்-ஜாதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக எண்ணெய் வர்த்தகத்தில் 25 சதவீதத்தைக் கையாளும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவிட் காலத்தில் எண்ணெய்க்கான தேவை குறைந்திருந்தது, ஆனால் தற்போது தேவை அதிகமாக இருந்தும் விநியோகம் இல்லாததால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150 டாலரைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிசக்தி தட்டுப்பாட்டினால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

இந்த நிலை தொடர்ந்தால் வளரும் நாடுகள் மீள முடியாத பொருளாதார சரிவைச் சந்திக்கும் என்றும், இது உலகளாவிய மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்றும் சவுதி அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author