சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு மார்ச் 27ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் கட்சிக் குழுக்களின் பணிக்கான விதி முறைகளைப் பரிசீலனை செய்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
ஷிச்சின்பிங்கை மையமாக கொண்ட கட்சியின் தலைமையை உள்ளூர் கட்சிக் குழுக்கள் உறுதியாகப் பேணிகாக்க வேண்டும். மத்திய கமிட்டியின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து உள்ளூர் பிரதேசத்தின் நிலைமையுடன் நெருக்கமாக ஒன்றிணைக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
