“1964-க்கு அப்புறம் இப்போ 2026-ல நடந்திருக்கு” 60 வருடத்திற்கு பிறகு 89.83% வாக்குகள் பதிவு…. வரலாற்றுச் சாதனை படைத்த புதுச்சேரி….!! 

Estimated read time 1 min read

புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் மிக உற்சாகமாகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இதில் குறிப்பாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரலாற்றிலேயே முதல்முறையாக 89.83% வாக்குகள் பதிவாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது 1964-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அசாம் மாநிலத்திலும் கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவான 84.67% என்ற சாதனையை முறியடித்து, இந்த முறை 85.38% வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரளாவிலும் மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இந்த அதீத வாக்குப்பதிவு ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருக்குமா அல்லது மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்துள்ளார்களா என்ற விவாதம் இப்போதே அரசியல் வட்டாரத்தில் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author