திமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான 86 வயதான துரைமுருகன், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று (அக்டோபர் 24) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது தொடர்பான பிரச்சனைகளால் அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு வரும் அமைச்சர் துரைமுருகன், சென்னை செல்வதற்காக காட்பாடி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஏறும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அவரது உடல்நிலையைக் கண்டு பதற்றமடைந்த ஆதரவாளர்கள், உடனடியாக அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அமைச்சர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.