தனுஷின் ‘கர’ படத்திற்கு தடைக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

Estimated read time 1 min read

நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகியுள்ள “கர ” படத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Dhanush 54th Movie Kara : தனுஷின் 54-வது படம் 'கர'... இந்த ஷார்ட் டைட்டில்  பின்னணியில் இப்படியொரு கதை இருக்கா..! | Dhanush 54th Movie With Vignesh  Raja Titled As Kara | Asianet News Tamil

இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள கர படத்தில், நடிகர் தனுஷ், மமிதா பைஜு, கே. எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் பூவாய் அம்மன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகரும் தயாரிப்பாளருமான வேங்கை அய்யனார் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில்ஏற்கனவே கடந்த 2021ம்  ஆண்டு முன்பு *கரா* என்ற தலைப்பில் படப்பெயரை  தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து,நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிப்பில் படத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது தனுஷ் நடித்த கர படத்தின் தலைப்பை மாற்றக்கோரி தயாரிப்பாளர் சங்கத்திலும் முறையிட்டதாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
தான் பதிவு செய்த பெயரை பயன்படுத்த கூடாது என்றும் தனுஷின் பட தலைப்பை கர என்ற பெயரை ஆங்கிலத்திலும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே கர என்ற நடிகர் தனுஷ் பட தலைப்பை மற்ற வேண்டும் பெயரை மாற்றாமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Please follow and like us:

You May Also Like

More From Author