தூய்மை பணியாளர்கள் மாண்பை அரசு விட்டு கொடுக்காது – மு.க.ஸ்டாலின்.!

Estimated read time 1 min read

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களின் மாண்பை தமிழ்நாடு அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திமுக அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் போன்ற எந்தவொரு சூழலிலும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு. தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை, தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி, தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு.

தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள். பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி. தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை, தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளையும் மரியாதையையும் பாதுகாக்க அரசின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது, குறிப்பாக சென்னை மாநகராட்சியில் தனியார் மயமாக்கலுக்கு எதிரான எதிர்ப்புகள் பற்றிய விவாதங்களுக்கு மத்தியில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author