சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான புஜியன், கடந்த வாரம் தனது முதல் சோதனைக்காக கடலுக்குச் சென்றது.
இது அமெரிக்காவின் உலகளாவிய இருப்புக்கு சீன கடற்படை சவால் விடும் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகும்.
இந்த புதிய விமானம் தாங்கி கப்பலுக்கு புஜியன் என்ற மாகாணத்தின் பெயரிடப்பட்டுள்ளது.
இதுவரை கட்டப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய, மிகவும் மேம்பட்ட சீன விமானம் தாங்கி கப்பல் இதுவாகும்.
புஜியன் கேரியர் ஷாங்காய் ஜியாங்னன் ஷிப்யார்டில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டது.
மேலும், அந்த விமானம் தாங்கி கப்பலின் உந்துவிசை, மின் அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை முதன்மையாக சோதிப்பதற்காக சோதனைகள் நடத்தப்பட்டன.