வளைகுடாவில் மீண்டும் மோதல்; அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்கள்  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தின் உச்சகட்டமாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் மூலம் பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் கெஷ்ம் தீவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் அரசு ஊடகமான ‘IRIB’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தளம் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு ஈரானிய ஆயுதப் படைகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன.
தங்களின் தொலைத்தொடர்பு கோபுரம் மற்றும் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு, பதிலடியை கொடுத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author