தமிழக காவல் துறையில் அதிரடி மாற்றம்! தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம்..!

Estimated read time 1 min read

தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். விதிகளின்படி, டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே, அடுத்த டிஜிபி பொறுப்புக்கு வரக்கூடிய தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) தமிழக அரசு அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. மாறாக, வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக முந்தைய திமுக அரசு நியமித்தது.

இதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்த போது, சந்தீப் ராய் ரத்தோரை சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக தேர்தல் ஆணையம் நியமித்தது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதை அடுத்து, புதிய டிஜிபி நியமனம் தொடர்பான யுபிஎஸ்சி ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது தமிழக அரசு சார்பில் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பரிந்துரை பட்டியல் வழங்கப்பட்டது. இதில், மகேஷ் குமார் அகர்வால் தமிழகத்தின் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று (ஜூன் 3) தமிழகத்தின் 34வது டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொள்கிறார். முன்னதாக, எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) இயக்குநர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

தமிழக காவல் துறையின் புதிய டி.ஜி.பி.,யாக மகேஷ்குமார் அகர்வால் இன்று (ஜூன் 03) பதவியேற்கிறார். இந்நிலையில் தேர்தல் கமிஷனால் டிஜிபியாக நியமிக்கப்ட்டிருந்த சந்தீப் ராய் ரத்தோரை சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர், அமலாக்கப் பிரிவு சிஐடி ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author